முதல்-அமைச்சர் வருகையின் போது பிளக்ஸ்போர்டு வைப்பதை தவிர்க்க வேண்டும்


முதல்-அமைச்சர் வருகையின் போது பிளக்ஸ்போர்டு வைப்பதை தவிர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 11 Aug 2023 6:45 PM GMT (Updated: 11 Aug 2023 6:46 PM GMT)

முதல்-அமைச்சர் வருகையின் போது பிளக்ஸ்போர்டு வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ந்தேதி ராமநாதபுரம் வருகிறார். அன்று தென் மண்டல பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். அன்று இரவு ராமநாதபுரத்தில் ஓய்வெடுக்கிறார். மறுநாள்(18-ந் தேதி) மண்டபத்தில் மீனவர் நல மாநாடு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் கலந்து கொள்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் வருவதை தொடர்ந்து அந்த கட்சியினருக்கு தி.மு.க மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஒரு அறிக்கை அனுப்பி உள்ளார் அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் உத்தரவுபடி அமைச்சர் .ராஜ கண்ணப்பன் மற்றும் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் அறிவுறுத்தலின்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்வரும் 17-ந் தேதி வருகையின் போது கட்சி நிர்வாகிகள் பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை முற்றிலும் தவிர்க்குமாறும், தி.மு.க. இரு வண்ண கொடிகள் கொண்டு மிகச் சிறப்பான வரவேற்பு அளித்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Related Tags :
Next Story