சென்னையில் விட்டு விட்டு மழை...!


சென்னையில் விட்டு விட்டு மழை...!
x

சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

சென்னை,

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று (திங்கட்கிழமை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, அசோக் நகர், ஆலந்தூர், கோயம்பேடு, தி.நகர், சைதாப்பேட்டை, போரூர், தேனாம்பேட்டை நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.


Next Story