திருவண்ணாமலையில் மழை


திருவண்ணாமலையில் மழை
x

திருவண்ணாமலையில் நேற்று மழை பெய்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு சராசரியாக 100 டிகிரிக்கு மேல் பதிவானது. நேற்று முன்தினம் 'அக்னி நட்சத்திரம்' என்னும் கத்தரி வெயில் நிறைவடைந்தது.இந்த நிலையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்கள் அவதிப்பட்டனர்.

நேற்று வெயிலின் அளவு 99.8 டிகிரியாக பதிவாகியிருந்தது. மாலையில் திடீரென மழை பெய்தது. இந்த மழை 10 நிமிடங்களே நீடித்தது. இருந்தாலும் மழைக்கு பின்னர் குளிர்ந்த காற்று வீசியது.


Related Tags :
Next Story