தாம்பரம் நகைக்கடையில் கொள்ளை- வடமாநில வாலிபர் கைது


தாம்பரம் நகைக்கடையில் கொள்ளை- வடமாநில வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Nov 2022 10:25 AM IST (Updated: 26 Nov 2022 11:04 AM IST)
t-max-icont-min-icon

நள்ளிரவில் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் மாடியில் இருந்து லிப்ட் வழியாக கடைக்குள் புகுந்து கைவரிசையில் ஈடுபட்டனர்.

சென்னை,

செங்கல்பட்டு தாம்பரம் அருகே சேலையூர்- வேளச்சேரி சாலையில் உள்ள ப்ளூ ஸ்டோன் என்கிற பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. நேற்று நள்ளிரவில் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் மாடியில் இருந்து லிப்ட் வழியாக கடைக்குள் புகுந்து கைவரிசையில் ஈடுபட்டனர்.

இதில், கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளும் திருடப்பட்டுள்ளன. லாக்கரை திறக்க முயற்சி செய்தபோது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்துள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்து வருகின்றனர்.

மேலும், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து போலீசார் சோதனை செய்தனர். இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். கொள்ளையன் அதே பகுதியிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ள கைது செய்த கொள்ளையனிடம் சேலையூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story