கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டி வழிபாடு
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டி வழிபாடு நடைபெற்றது.
கடலூர்
விருத்தாசலம்
விருத்தாசலத்தை அடுத்த மணவாளநல்லூர் சித்திவிநாயகர், கொளஞ்சியப்பர் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை, மற்றும் பங்குனி உத்திரம், வசந்த உற்சவம் உள்ளிட்ட விசேஷ தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அந்த வகையில் நேற்று சஷ்டியை முன்னிட்டு சித்தி விநாயகர் மற்றும் கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதேபோல் விருத்தாசலம் வேடப்பர், ஆதிகொளஞ்சியப்பர், விருத்தகிரிகுப்பம், ஆலிச்சிக்குடி கிராமங்களில் அமைந்துள்ள சுப்பிரமணியர் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Related Tags :
Next Story