புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்
புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தாயில்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது சந்தேகம் அளிக்கும் வகையில் சாலையில் நடந்து சென்ற 2 பேரிடம் விசாரணை செய்ய சென்றனர். அப்போது அங்கிருந்து ஒரு பெண் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அங்கிருந்த பையை சோதனை செய்த போது விற்பனைக்காக 15 புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கோட்டையூர் நடுத்தெருவை சேர்ந்த கனகராஜ் (வயது 60) என்பது தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கனகராஜை கைது செய்தார்.
Related Tags :
Next Story