புனித அடைக்கல மாதா ஆலய தேர் பவனி
வேங்கிடகுளத்தில் புனித அடைக்கல மாதா ஆலய தேர் பவனி நடைபெற்றது.
ஆலங்குடி:
தேர் பவனி
ஆலங்குடி அருகே வேங்கிடகுளத்தில் புனித அடைக்கல மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தேர்பவனி திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் புனித அடைக்கல மாதா திருஉருவ கொடியேற்று கூட்டுப்பாடல் திருப்பலி மற்றும் கொடி சுற்றுப்பவனியும் நடைபெற்று வந்தது. நவநாள் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. வேங்கிடகுளம் அருட்திரு பங்குத்தந்தை பபியான் தலைமையில் அருட்தந்தையர்கள் திருவிழா ஆடம்பர திருப்பலி பூஜையை சிறப்பாக நடத்தினர். இதையடுத்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித அடைக்கல மாதா ஆலய கோவிலில் 4 தேர் பவனி நடைபெற்றது. இதையடுத்து தேரினை நான்கு வீதிகள் வழியாக பொதுமக்கள் இழுத்து வந்தனர்.
திரளான கிறிஸ்தவர்கள்
இதில் வேங்கிடகுளம், பாத்தம்பட்டி, மரவள்ளிக்காடு சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.