பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் காயம்


பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் காயம்
x

பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் காயம் அடைந்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மகன் நரேஷ் (வயது 17). இவர் காரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை இடைவேளை நேரத்தில் நரேஷ் தனது நண்பர்களுடன் கழிவறையின் மறைப்பு சுவர் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது மறைப்பு சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததில் நரேசுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நரேஷ் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story