நினைவு சின்னங்களை பாதுகாப்பதில் மாணவர்கள் அக்கறை செலுத்த வேண்டும்- தொல்லியல் அலுவலர்
நினைவு சின்னங்களை பாதுகாப்பதில் மாணவர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என தொல்லியல் அலுவலர் அறிவுறுத்தினார்.
நினைவு சின்னங்களை பாதுகாப்பதில் மாணவர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என தொல்லியல் அலுவலர் அறிவுறுத்தினார்.
மனோராவில் மரபு வார விழா
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மனோரா சுற்றுலாத்தலத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில், உலக மரபு வாரவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தஞ்சை தொல்லியல் துறை அலுவலர் தங்கதுரை தலைமை தாங்கி ேபசியதாவது:-
தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் நவம்பர் 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மரபுச் சின்னங்களை கட்டணம் இன்றி பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
போட்டிகள்
மேலும், மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. மனோரா சுற்றுலாத்தலம் 2-ம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட 300 ஆண்டுகளை கடந்த பொக்கிஷம். வாட்டர்லூ என்ற இடத்தில் நடைபெற்ற போரில், மாவீரன் நெப்போலியன் ஆங்கிலேயப் படையினரிடம் தோல்வி அடைந்தார்.
நெப்போலியன் தோல்வியை வெளியுலகுக்கு தெரிவிக்கவும், ஆங்கிலேயரின் வெற்றியை கொண்டாடியும், 2-ம் சரபோஜி மன்னரால் உருவாக்கப்பட்டது தான் இந்த மனோரா என்னும் நினைவுச்சின்னம்.
மாணவர்கள் அக்கறை
மாணவர்கள் நினைவுச் சின்னங்களை பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சத்தியநாதன், சாரண ஆசிரியர் முத்துசாமி, காரைக்குடி பட்டாலியன் ஹவில்தார் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, பேராவூரணி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம், சாரண இயக்க மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மனோராவில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.