கரும்பு வளர்ப்போர் சங்க கூட்டம்


கரும்பு வளர்ப்போர் சங்க கூட்டம்
x

பெண்ணாடத்தில் கரும்பு வளர்ப்போர் சங்க கூட்டம் நடந்தது.

கடலூர்

பெண்ணாடம்,

கடலூர் மாவட்ட கரும்பு வளர்ப்போர் சங்க பொதுக்குழு கூட்டம் பெண்ணாடத்தில் நடந்தது. இதற்கு சுயம் பிரகாசம் தலைமை தாங்கினார். சங்க துணைத் தலைவர் ராஜேந்திரன், சரவணன், பழமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் திருஞானம் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாக சங்க பொருளாளர் முத்துவேல் அனைவரையும் வரவேற்றார்.இக்கூட்டத்தில் கடந்த 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை இறையூர் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய 15 ஆயிரத்து 403 விவசாயிகளுக்கு 50 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. இந்தநிலையில் இந்த ஆலையை வாங்கிய நிர்வாகம் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு 50 கோடி ரூபாய் பாக்கி தொகையை வழங்கவேண்டும். இல்லையென்றால் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்ட கரும்பு விவசாய சங்க பொறுப்பாளர் ஞானமூர்த்தி, ஐ.என்.டி.எஸ்.சி. ராமலிங்கம், எஸ்.மா. கந்தசாமி, பெண்ணாடம் காங்கிரஸ் நகர தலைவர் கந்தசாமி, இறையூர் செந்தில்பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.


Next Story