ஓடக்கரை மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


ஓடக்கரை மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

ஓடக்கரை மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஓடக்கரை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு 9-ம் ஆண்டு பால்குடம் மற்றும் தீமிதி திருவிழா கடந்த 1-ம் தேதி பந்தக்கால் முகூர்த்தத்தோடு தொடங்கியது. பின்னர் கணபதி ஹோமம் மற்றும் பால்குடம் ஆகிய நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் காவிரி ஆற்றங்கரையில் இருந்து வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் இறங்கி ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story