மின்மயமாகிய அகல பாதையில் ரெயில் என்ஜினை இயக்கி சோதனை
விருதுநகரில் இருந்து மின்மயமாக்கப்பட்ட அகல பாதையில் ரெயில் என்ஜினை இயக்கி சோதனை செய்யப்பட்டது.
விருதுநகரில் இருந்து மின்மயமாக்கப்பட்ட அகல பாதையில் ரெயில் என்ஜினை இயக்கி சோதனை செய்யப்பட்டது.
மின்மயம்
விருதுநகரில் இருந்து சிவகாசி, ராஜபாளையம் வழியாக அகல ெரயில் பாதை மின் மயமாக்கப்பட்டு உள்ளது. இந்த பாதையில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு ெரயில் போக்குவரத்து மேற்கொள்வதற்காக நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தென்னக ெரயில்வே முதன்மை தலைமை மின் என்ஜினீயர் ஏ.கே.சித்தார்த்தா இந்த ஆய்வினை மேற்கொண்டார். அவருடன் மதுரை கோட்ட ெரயில்வே மேலாளர் அனந்த், தென்னக ரெயில்வே மின்சார பிரிவு உயர் அதிகாரிகள், மதுரை ெரயில்வே கோட்ட உயர் அதிகாரிகள் சென்றனர்.
பாலங்களில் ஆய்வு
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ெரயில்வே பாலத்தின் உயரம் குறைவாக உள்ள நிலையில் அங்கு மின்சார என்ஜின் இயக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தனர். அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் சிவகாசி, ராஜபாளையம் ெரயில் நிலையங்களிலும், சிக்னல்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ராஜபாளையம்-சங்கரன்கோவில் இடையேயான ெரயில் பாதையில் உள்ள பாலங்களிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு புனலூர் வரையிலான ெரயில் பாதையில் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செங்கோட்டை பகுதியில் இருந்து விருதுநகர் வரையில் முதன்மை தலைமை மின் என்ஜினீயர் ஏ.கே.சித்தார்த்தா, ரெயில் என்ஜினில் வேக சோதனை மேற்கொண்டார்.