அக்னி நட்சத்திரம் மழையுடன் நிறைவடைந்தது


அக்னி நட்சத்திரம் மழையுடன் நிறைவடைந்தது
x

புதுக்கோட்டையில் அக்னி நட்சத்திரம் மழையுடன் நிறைவடைந்தது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை,

கோடை வெயில்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்பு வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். வெயிலால் ஏற்படும் உடல் உபாதைகளை தடுப்பதற்காக குளிர்ச்சி தரக்கூடிய உணவு வகைகளான தர்பூசணி, நுங்கு, வெள்ளரி பிஞ்சுகளை சாப்பிட்டும், இளநீர், பழச்சாறுகளை அருந்தியும் வருகின்றனர்.

வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சாலையில் நடந்து செல்பவர்கள் குடைகளை பிடித்தப்படி செல்வதையும் காணமுடிகிறது. பெண்கள் சிலர் சேலை, துப்பட்டாவால் தலையை மூடியபடியும் செல்கின்றனர்.

நிறைவு நாளில் மழை

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் நேற்றுடன் நிறைவடைந்தது. புதுக்கோட்டையில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் சிறிது மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ஆங்காங்கே மழை பெய்திருந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளிலும் மழை பெய்தது. நிறைவடையும் போதும் மழை பெய்துள்ளது.

அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் இனி வெயிலின் தாக்கம் குறையுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Related Tags :
Next Story