மனைவியின் தம்பியை கத்தியால் கீறியவர் கைது


மனைவியின் தம்பியை கத்தியால் கீறியவர் கைது
x

மனைவியின் தம்பியை கத்தியால் கீறியவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி காமராஜ் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் செந்தமிழ் செல்வன் (வயது 23). அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (35). செந்தமிழ் செல்வனின் அக்காளை ரமேஷ் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் திருமணத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று அடிக்கடி செந்தமிழ் செல்வன் குடும்பத்தாரோடு ரமேஷ் சண்டையிட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ரமேஷ் அவரது மனைவியிடம் இது தொடர்பாக சண்டை போட்டதாக செந்தமிழ் செல்வனிடம் அவரது அக்காள் கூறிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரமேஷ் தகாத வார்த்தைகளால் திட்டி தான் கையில் வைத்திருந்த சிறிய கத்தியால் செந்தமிழ் செல்வனை கீறி ரத்தக்காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து செந்தமிழ் செல்வன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தார்.


Next Story