2 குழந்தைகளை விட்டு விட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் பெண் ஓட்டம்


2 குழந்தைகளை விட்டு விட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் பெண் ஓட்டம்
x
தினத்தந்தி 23 April 2024 7:16 AM IST (Updated: 23 April 2024 7:45 AM IST)
t-max-icont-min-icon

2 குழந்தைகளின் தாயையும், அவருடைய இன்ஸ்டாகிராம் காதலனையும் போலீசார் தேடிவருகின்றனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் தொளசம்பட்டி அருகே கிழக்கூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 29). இவருடைய மனைவி சுதர்சனா (28). இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக சுதர்சனா இன்ஸ்டாகிராமை அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அவருடைய கணவர் கார்த்தி கண்டித்துள்ளார். அப்படி இருந்தும் சுதர்சனா இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவதை நிறுத்தவில்லை.

இதற்கிடையே சுதர்சனா 2 குழந்தைகளை விட்டு விட்டு திடீரென தலைமறைவாகி விட்டார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கார்த்தியால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக தொளம்சம்பட்டி போலீசில் கார்த்தி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சுதர்சனா, இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. அந்த காதலன் யார் என்று போலீசார் விசாரித்த போது அந்த நபர், மேச்சேரி பகுதியை சேர்ந்த மாதேஸ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 குழந்தைகளின் தாயையும், அவருடைய இன்ஸ்டாகிராம் காதலனையும் தேடிவருகின்றனர்.


Next Story