டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி


டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
x
தினத்தந்தி 21 Aug 2023 6:45 PM GMT (Updated: 21 Aug 2023 6:46 PM GMT)

ராமநாதபுரம் அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 55). இவர் ராமநாதபுரம் அருகே உள்ள காவலூரை சேர்ந்த மாரி என்பவரின் காளவாசலில் டிராக்டர் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை டிராக்டரில் ராமநாதபுரம் அருகே உள்ள தெற்குதரவை சென்றார். அங்கு பனைமரச் சட்டங்களை ஏற்றிக்கொண்டு காவனூருக்கு சென்று கொண்டு இருந்தார். ராமநாதபுரம் அருகே மடக்கொட்டான் விலக்கு ரோடு பகுதியில் வந்த போது டிராக்டர் செல்லப்பாண்டியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. இதில் டிராக்டரில் சிக்கி செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story