எதிர்க்கட்சியுடன் துரோகிகள் சேர்ந்து அ.தி.மு.க.வெற்றியை பறித்து விட்டனர்எடப்பாடி பழனிசாமிபேச்சு


எதிர்க்கட்சியுடன் துரோகிகள் சேர்ந்து அ.தி.மு.க.வெற்றியை பறித்து விட்டனர்எடப்பாடி பழனிசாமிபேச்சு
x
தினத்தந்தி 10 Aug 2022 1:03 AM IST (Updated: 10 Aug 2022 1:05 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலின்போது சில துரோகிகள் கூட இருந்து கொண்டே எதிர்க்கட்சியுடன் கைகோர்த்துக்கொண்டு அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை பறித்து விட்டனர் என நாட்டறம்பள்ளியில் கட்சியினர் நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

தேர்தலின்போது சில துரோகிகள் கூட இருந்து கொண்டே எதிர்க்கட்சியுடன் கைகோர்த்துக்கொண்டு அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை பறித்து விட்டனர் என நாட்டறம்பள்ளியில் கட்சியினர் நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேaசமாக பேசினார்.

வரவேற்பு

சேலத்தில் இருந்து சென்னைக்கு சென்ற அ.தி.மு.க.இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் மேளதாளங்கள் முழங்கவும், பட்டாசு வெடித்தும் நடனம் நாட்டிய நிகழ்ச்சியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்த எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியேற்றிய பின்னர் மேடைக்கு வந்தார். அப்போது அவர் ேபசியதாவது:- தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளை ஓட ஓட விரட்ட கூடிய வகையில் நீங்கள் கூடியிருக்கின்றீர்கள். இன்றைக்கு நம்மோடு இருந்து கொண்டு சில துரோகிகள் வெற்றி வாய்ப்புகளை தடுப்பதற்க்கு பல்வேறு சதி ஓலைகளை பிண்ணினார்கள். அதனால் அ.தி.மு.க. ஆட்சி ஏற்படாமல் போய்விட்டது. யார் துரோகி அந்த கருப்பு ஆடு யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த துரோகிகள் எல்லாம் ஆட்சியாளர்களின் கைப்பாவையாக செயல்பட்டு நமது இயக்கத்தை முடக்க பார்க்கின்றார்கள். ஆனால் எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை அசைத்துப் பார்க்க முடியாது.

இந்த ஆட்சியில் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் அதிக அளவில் விற்கப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவிகள் மது குடித்துக் கொண்டு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி

பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் மட்டுமே கஞ்சா அதிக அளவில் விற்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 2137 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவலை சட்டப்பேரவையில் சுட்டிக் காட்டி இருக்கின்றேன். அ.தி.மு.க. ஆட்சியில்தடை செய்யப்பட்டிருந்த ஆன்லைன் ரம்மி, ஆட்சி மாற்றத்தால் அதிகரித்து உள்ளது. இதனை தடை செய்ய வேண்டிய முதல்-அமைச்சர் இது குறித்து கருத்து கேட்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இது வேதனைக்குரிய ஒரு செயலாக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story