பொன்மலை ரெயில்வே பணிமனையில் பழைய பயணிகள் பெட்டிகளை வாகனம் ஏற்றும் பெட்டியாக மாற்றும் பணி தொடங்கியது


பொன்மலை ரெயில்வே பணிமனையில் பழைய பயணிகள் பெட்டிகளை வாகனம் ஏற்றும் பெட்டியாக மாற்றும் பணி தொடங்கியது
x

பொன்மலை ரெயில்வே பணிமனையில் பழைய பயணிகள் பெட்டிகளை வாகனம் ஏற்றும் பெட்டியாக மாற்றும் பணி தொடங்கியது.

திருச்சி

இருக்கைகள் அகற்றப்பட்டு...

புதுடெல்லி ரெயில்வே வாரியம் சார்பில், திருச்சி பொன்மலை பணிமனையில் 100 பழைய பயணிகள் பெட்டிகளை வாகனம் கொண்டு செல்லும் பெட்டியாக மாற்றும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 176 பழைய பெட்டிகள் வாகனங்கள் கொண்டு செல்லும் பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது 100 பழைய பயணிகள் பெட்டிகளை வாகனம் கொண்டு செல்லும் பெட்டிகளாக மாற்றி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் பழைய பயணிகள் பெட்டிகளில் உள்ள அனைத்து இருக்கைகளும் அகற்றப்பட்டு, வாகனங்களை எளிதாக ஏற்றி இறக்குவதற்கு ஒவ்வொரு பெட்டியிலும் 'ஸ்லைடிங்' கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன, இரு சக்கர வாகனங்களை உள்ளே ஏற்றிச்செல்வதை அதிகரிக்க இரட்டை அடுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

என்ஜின்களை மாற்றியமைக்கும் பணி

மேலும் இந்த பெட்டிகள், பொருட்கள் மற்றும் பார்சல்களை கொண்டு செல்லவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பணியைத் தவிர, அகல ரெயில் பெட்டிகள் மற்றும் டீசல் என்ஜின்களை மாற்றியமைத்தல், நீலகிரி மலை ரெயில் பிரிவில் இயக்கப்படும் நீராவி என்ஜின்களை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பணிகளில் பொன்மலை பணிமனை ஈடுபட்டுள்ளது என்று பணிமனை அதிகாரி தெரிவித்துள்ளார்.


Next Story