பால்கடையில் பூட்டை உடைத்து திருட்டு
பால்கடையில் பூட்டை உடைத்து திருட்டு நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரை சேர்ந்த சேதுபாண்டியன மகன் வீரகுமார் (வயது42). இவர் ராமநாதபுரம் பட்டினம் காத்தான் கிழக்கு கடற்கரை சாலையில் ஆவின்பால் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வழக்கம்போல வீட்டிற்கு சென்று விட்டார். அதிகாலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது நள்ளிரவில் 2 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரொக்க பணம் ரூ.3 ஆயிரத்து 550ஐ திருடி சென்றது தெரிந்தது. கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story