கோழிப்பண்ணையில் திருட்டு


கோழிப்பண்ணையில் திருட்டு
x
தினத்தந்தி 19 Feb 2023 6:45 PM GMT (Updated: 19 Feb 2023 6:46 PM GMT)

தேனி அல்லிநகரத்தில் கோழிப்பண்ணையில் திருடிய மர்ம நபர்களை தேடி போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி

தேனி அன்னஞ்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் அழகேசன். இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இந்த பண்ணைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 50 கிலோ இரும்பு பொருட்கள், மின்விசிறி, 3 கடப்பாரைகள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். இதுகுறித்து அழகேசன் அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து பண்ணையில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.


Related Tags :
Next Story