ஓட்டலில் ரூ.12 ஆயிரம் திருட்டு
ராமநாதபுரம் அருகே ஓட்டலில் ரூ.12 ஆயிரம் திருட்டு நடைபெற்றது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் வலம்புரிநகர் 5-வது தெருவை சேர்ந்தவர் அப்துல்அஜீஸ் மகன் முகம்மது கனி (வயது 38). இவர் ராமநாதபுரம் சூரங்கோட்டை அரசு மதுபானக்கடை அருகில் நயினார்கோவில் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடையை அடைத்து விட்டு வெளியூர் சென்று விட்டு இரவு கடையை திறக்க வந்தபோது கடையின் பின்புறம் தகரத்தை விலக்கி யாரோ உள்ளே புகுந்திருந்தது தெரிந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கல்லாபெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.12 ஆயிரத்து 300-ஐ திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முகம்மது கனி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story