தூத்துக்குடி: வெள்ளத்தில் மூழ்கிய அரிசி மூட்டைகளை சாலையில் வீசிச்சென்ற வியாபாரிகள்
தூத்துக்குடியில் பெய்த அதிகனமழையின் காரணமாக, ஏரல் மார்க்கெட் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது.
தூத்துக்குடி,
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17, 18-ந் தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் அதி கனமழை பெய்தது. இடைவிடாமல் கொட்டித்தீர்த்த மழையால் தூத்துக்குடி நகரமே வெள்ளத்தில் மூழ்கியது.
தற்போது மழை நின்றும், தூத்துக்குடி மாநகரில் மழைநீர் வடியாமல் இருப்பதால், மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். மழை வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள்.
இதற்கிடையில், தூத்துக்குடியில் பெய்த அதிகனமழையின் காரணமாக, ஏரல் மார்க்கெட் பகுதி முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியதால், 500-க்கும் மேற்பட்ட சிறு குறு கடைகளுக்குள் வெள்ளம் புகுந்து சேதம் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தில் மூழ்கிய அரிசி, பருப்பு, கோதுமை, தானியங்கள், எண்ணெய், உள்ளிட்ட பொருட்கள் மறு பயன்பாட்டுக்கு உதவாது என்பதால் அவற்றை வியாபாரிகள் வேதனையுடன் சாலையில் வீசி சென்றனர்.