கடைகளில் 'பார்க்கிங்' வசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசல்


கடைகளில் பார்க்கிங் வசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசல்
x

கடைகளில் ‘பார்க்கிங்’ வசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசல்

திருப்பூர்

திருப்பூர்

பரபரப்பான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் போக்குவரத்து நெரிசல் என்பது பொதுமக்களுக்கு தலைவலியாக மாறி வருகிறது. தற்போது ஒருசாதாரண நடுத்தர குடும்பத்தில்கூட ஒன்றிற்கு மேற்பட்ட வாகனங்களை வைத்திருக்கிறார்கள். வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்ததும் ஒருவகையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. இதுதவிர சாலை அகலம் குறைவு, குண்டும், குழியுமான சாலைகள், போக்குவரத்து விதிமுறை மீறி பொதுமக்கள் செயல்படுவது போன்ற காரணங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஒருசில சமயங்களில் விபத்துகள் நிகழும் சம்பவங்களும் நடக்கதான் செய்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு அதிக முயற்சி மேற்கொண்டும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. இதனால் சாலையில் நடப்பதற்குகூட பொதுமக்கள் பயப்படுக்கின்றனர்.

இந்தநிலையில் பின்னலாடை நகரமாக விளங்கும் திருப்பூர் மாநகரை பொறுத்தவரை உள்ளூர், வௌியூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளிமாநிலத்தவரும் வேலையின் காரணமாக லட்சக்கணக்கான பேர் வசித்து வருகின்றனர். இதனால் அதிகளவில் பல்வேறு வகையான கனரக வாகனங்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலை பொறுத்தவரை திருப்பூர் மாநகரத்துக்கு பஞ்சமில்லை. தினமும் அதிகளவிலான வாகனங்கள் சாலைகளில் காத்திருந்துதான் செல்கின்றனர். குறிப்பாக சிலநேரங்களில் ஆபத்து காலத்தில் உதவும் வாகனமான ஆம்புலன்சும் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் அவலநிலை ஆங்காங்கே நடக்கத்தான் செய்கிறது. திருப்பூரில் அப்படி போக்குவரத்து நெரிசல் ஏற்பட என்ன காரணம்? என்பதை பற்றி பொதுமக்கள், கடைக்காரர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் தங்கள் கருத்துகளை கூறியதாவது:-

ஏழுமலை (விற்பனை ஊழியர்-கருவம்பாளையம்):-

திருப்பூர் கோர்ட்டு வீதி முக்கிய சாலை என்பதால் அதிகமான வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்கின்றன. ஆனால் இந்த சாலையின் இரண்டு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்திவிட்டு பொதுமக்கள் கடைகளுக்கு செல்கிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை 8 மணி முதல் 11 மணி வரை இந்த சாலை அதிக போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. இதன்காரணமாக வாகனங்களை இயக்குவதற்கு இடம் இல்லாமல் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். மேலும் நடந்து செல்வதற்கும் மக்கள் சிரமப்படுகின்றனர்.

என்னுடைய வேலையும் இதனால் பாதிக்கப்படுகிறது. நேரத்திற்கு சென்று மக்களை சந்திக்க முடியவில்லை. எனவே தனியாக வாகனம் நிறுத்துவதற்கு 'பார்க்கிங்' வசதி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். அதேபோல் நடந்து செல்வோருக்கும் தனியாக நடப்பாதை அமைத்து கொடுக்க வேண்டும்.

சுமித்ரா (திருமுருகன்பூண்டி):-

திருப்பூர் குமரன் ரோட்டில் வாகனங்களை வாகன ஓட்டிகள் ரோட்டு மேல் நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்கின்றனர். இதன்காரணமாக நடந்து செல்பவர்களுக்கு போதிய இடம் இருப்பதில்லை. இதனால் மக்கள் நடந்து செல்வதற்கு சிரமம் அடைகின்றனர். ஒருசில நேரங்களில் சிலர் வாகனங்களில் அதிக வேகத்தில் செல்லும்போது ரோட்டில் செல்வதற்கு பயமாக இருக்கிறது. விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கையை போக்குவரத்து போலீசார் எடுத்து வாகனங்கள் செல்வதை ஒழுங்குப்படுத்த வேண்டும்.


--------


Next Story