எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x

எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் வட்டாரம் திருவத்தேவன் கிராமத்தில் நெல் சாகுபடிக்கு பின் எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு தஞ்சை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ஈஸ்வர் தலைமை தாங்கி பேசினார். தொடர்ந்து பட்டுக்கோட்டை விதை சான்று விதை ஆய்வாளர் நவின்சேவியர், சேதுபாவாசத்திரம் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி ஆகியோர் பேசினர். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் பிரதீபா, அட்மா திட்ட அலுவலர்கள் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் செய்திருந்தனர். முடிவில் துணை வேளாண்மை அலுவலர் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Next Story