வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்


வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 26 Nov 2022 6:45 PM GMT (Updated: 26 Nov 2022 6:46 PM GMT)

சின்னசேலம் அருகே வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஏர்வாய்பட்டிணம் கிராமத்தில் கச்சிராயப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் மதியழகன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் அன்புமணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிபன்னீர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மணி, அய்யாவு, ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்விகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக உதயசூரியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களையும் வழங்கினார். இதையடுத்து ஊட்டச்சத்து மிகுந்த காய்கறி கண்காட்சியை அவர் பார்வையிட்டார். முகாமில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளித்தனர். இதில் 5 பேர் மேல்சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். முகாமில் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் ராம்குமார், ஜெயஸ்ரீ, ஞானகுமார், சிவசங்கர், சிவரஞ்சனி மற்றும் சித்த மருத்துவர் சுரேஷ்குமார், சுதர்சன், சிவபிரசாந்த், ஜெயஷாலினி, சமுதாய நல செவிலியர் சரோஜா, பகுதி சுகாதார செவிலியர் கிருஷ்ணவேணி, கிராம சுகாதார செவிலியர் கலா, மருத்துவமில்லா மேற்பார்வையாளர் விஜயராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story