திருமங்கலம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்


திருமங்கலம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
x

100 நாட்கள் வேலை வழங்கக்கோரி திருமங்கலம் யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

மதுரை

திருமங்கலம்,


100 நாட்கள் வேலை வழங்கக்கோரி திருமங்கலம் யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

முற்றுகை

திருமங்கலம் யூனியனுக்குட்பட்டது பன்னிகுண்டு மற்றும் நக்கலகோட்டை. இந்த கிராமங்களில் தற்போது 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது. ஊருணி, கண்மாய்கள், வரத்து கால்வாய் பகுதிகள் தற்போது மழை நீரால் நிரம்பி உள்ளது. இதனால் 100 நாள் வேலையின் ஒரு பகுதியாக மரக்கன்று நடும் பணி மட்டும் நடந்து வருகிறது. இந்த திட்டத்தில் 2 கிராமங்களுக்கும் தினமும் 20 நபர்களுக்கு மட்டுமே பணி வழங்கபடுகிறது. இதனால் அனைவருக்கும் வேலை கிடைக்கவில்லை. அனைத்து கிராம பொதுமக்களும் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் திருமங்கலம் யூனியன் பன்னிகுண்டு மற்றும் நக்கலகோட்டை கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு திருமங்கலம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சந்தானம் தலைமையில் இந்த முற்றுகை போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் அனைவருக்கும் வேலை வழங்குவதாக உறுதி அளித்ததால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருமங்கலம் யூனியன் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story