விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கு... போலீசாருக்கு பறந்த ஐகோர்ட்டு உத்தரவு


விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கு... போலீசாருக்கு பறந்த ஐகோர்ட்டு உத்தரவு
x

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இவ்விவகாரம் தொடர்பான ஆட்கொணர்வு மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விழுப்புரம்,

விழுப்புரம் அன்பு ஜோதி இல்லத்துக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அன்பு ஜோதி இல்லத்தில் ஆட்கள் மாயம் மற்றும் பாலியல் புகார்கள் எழுந்த நிலையில், இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இவ்விவகாரம் தொடர்பான ஆட்கொணர்வு மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆசிரமத்தில் ஆய்வு செய்துள்ளதாகவும், சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடரந்து வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story