சென்னையில் சட்டென்று மாறிய வானிலை - பலத்த காற்றுடன் மழை


சென்னையில் சட்டென்று மாறிய வானிலை - பலத்த காற்றுடன் மழை
x

சென்னையில் ஒருசில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

சென்னை,

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக, இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் மாலை சட்டென்று வானிலை மாறியது. நகரின் பல பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. எழும்பூர், சென்னை சென்டிரல், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, பல்லாவரம், கிண்டி, அம்பத்தூர், கொரட்டூர், கீழ்கட்டளை, பூந்தமல்லி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்பட நகரின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story
  • chat