டிராக்டர் மோதி பெண் சாவு


டிராக்டர் மோதி பெண் சாவு
x

ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் மீது டிராக்டர் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

அரியலூர்

கூலி தொழிலாளி

பெரம்பலூர் மாவட்டம் பறவை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி தெய்வமணி (வயது 35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் இறந்துவிட்டார். இதனால் தெய்வமணி கூலி வேலை செய்து தனது குடும்பத்தை நடத்தி வந்தார்.

இந்தநிலையில் தெய்வமணி வேலைக்கு செல்வதற்காக மேட்டுத்தெரு பர்கூரை சேர்ந்த செல்வராஜ் (44) என்பவருடைய மோட்டார் சைக்கிளில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரத்திற்கு சென்று கொண்டு இருந்தார்.

டிராக்டர் மோதி பலி

அப்போது சாலையில் வேகத்தடை இருந்ததை கவனிக்காமல் செல்வராஜ் சென்றதாக கூறப்படுகிறது. இதில், கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக சென்றது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தெய்வமணி மீது அந்த வழியாக சென்ற டிராக்டர் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தெய்வமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தெய்வமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ேமலும், இந்த விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story