முதல்-அமைச்சர் ஆகி விடலாம் என்று மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


முதல்-அமைச்சர் ஆகி விடலாம் என்று மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 2 March 2021 1:41 AM GMT (Updated: 2021-03-02T07:11:29+05:30)

முதல்-அமைச்சர் ஆகி விடலாம் என்று மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.

மதுரை, 

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். கூட்டணி நிலைப்பாடு குறித்து பிறகு தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கார் மூலம் தேனி புறப்பட்டு சென்றார்.

Next Story