மேற்கு வங்க தேர்தல்: பிற்பகல் 3.39 மணி நிலவரப்படி 66.76 சதவீத வாக்குகள் பதிவு
மேற்கு வங்காளத்தில் பிற்பகல் 3.39 மணி நிலவரப்படி 66.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்கத்தில் 4-ஆம் கட்டமாக 44 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், மேற்கு வங்க 4-ம் கட்டத் தேர்தலில், 3.39 மணி நிலவரப்படி 66.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
44 தொகுதிகளும் பதற்றமான தொகுதிகளாக தோதல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளதால் 789 கம்பெனி பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கூச் பிகாா் மாவட்டத்தில் மட்டும் 187 கம்பெனி படைகள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story