அசாம் தேர்தல் நிலவரம்: பாஜக தொடர்ந்து முன்னிலை


அசாம் தேர்தல் நிலவரம்: பாஜக தொடர்ந்து முன்னிலை
x
தினத்தந்தி 2 May 2021 4:22 AM GMT (Updated: 2 May 2021 4:22 AM GMT)

அசாம் சட்டமன்ற தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏற்கெனவே 2 கட்டத் தேர்தல்கள் கடந்த மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி நடந்தமுடிந்துவிட்டன. 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 

இந்த தேர்தலில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் மெகா கூட்டணியை அமைத்தது. பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜகவின் நீண்ட நாள் கூட்டாளியான போடோலேண்ட் மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொண்டது காங்கிரஸ்.

மேலும் இந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, அன்சாலிக் கனமார்ஷா போன்ற கட்சிகளும் காங்கிரஸ் அணியில் இணைந்தன.

சிஏஏ உள்ளிட்ட சட்டங்களால் கடும் எதிர்ப்பு எழுந்தநிலையில் ஆளும் பாஜகவுக்கு தேர்தலில் கடும் சவால் ஏற்பட்டது. எனினும் இந்த தேர்தலில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டியே காணப்பட்டது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானவை பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில்,  அசாம் சட்டப்பேரவை தேர்தலில் ஆரம்ப கட்ட நிலவரங்களின் படி   பாஜக 51 இடங்களிலும் காங்கிரஸ் அணி 29 இடத்திலும் முன்னணியில் உள்ளன. 


Next Story