மாநில செய்திகள்

தொடர் மழை: சென்னை வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் + "||" + Continuous rain: Current state of vehicular traffic in Chennai

தொடர் மழை: சென்னை வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்

தொடர் மழை: சென்னை வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்
சென்னையில் தொடர் மழையால் வாகன போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து வெளுத்து வாங்கி வரும் மழையால் அனைத்து பகுதிகளிலும் இயல்பை விட அதிகமாகவே மழை பதிவாகி இருக்கிறது. 

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மழை நீடிக்கும் என்பதால் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 12 வட கடலோர மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் சென்னையில் பெய்து வரும் மழையால் சென்னை நகரின் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து வேறு சாலை வழியாக மாற்றம் செய்யப்படுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடையால் காமாட்சி மருத்துவமனை வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

* ரங்கராஜபுரம், மேட்லி சுரங்கப்பதைகளில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துக்கு தடையால் 2வது அவென்யூ வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துக்கு தடையால் கேசவர்திணி சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை ஏற்பட்டுள்ள போக்குவரத்துக்கு தடையால் ஹபியுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* மேலும், தாம்பரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதையிலும் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் விவகாரம்: “தமிழ்த்தாய் மன்னிப்பாள்; ஆனால் சட்டம்...?” - வைரமுத்து ஆவேசம்!
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்தது தொடர்பாக, கவிஞர் வைரமுத்து டுவிட்டர் வாயிலாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
2. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது போலீசில் புகார்!
ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்த பிரபல ரவுடி படப்பை குணா!
குணா மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டல், ஆள்கடத்தல் என 24 வழக்குகள் உள்ள நிலையில் தலைமறைவாக இருந்து வந்தார்.
4. தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; அரசாணை வெளியீடு!
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
5. சென்னையில் சேதமடைந்த நிலையில் உள்ள 20 ஆயிரம் குடியிருப்புகளை இடிக்க பரிந்துரை
சென்னையில் சேதமடைந்த 20,453 குடியிருப்புகளை உடனடியாக இடித்து மறுகட்டுமானம் மேற்கொள்ள வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.