பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 2 பேர் பலி


பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 2 பேர் பலி
x

கோப்புப்படம்

பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பங்துங்வா மாகாணத்தில் அரசு சார்பு அமைதி போராளிகள் குழுவை சேர்ந்தவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பயங்கரவாதிகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டை வெடிக்க செய்தது தெரிய வந்தது. எனினும் இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்கவில்லை.


Next Story