உலக செய்திகள்

இரு தலைவர்கள் சந்திப்பை அடுத்து வட, தென் கொரிய அரசுகள் இன்று பேச்சுவார்த்தை + "||" + North and South Korean governments negotiate today after the two leaders meet

இரு தலைவர்கள் சந்திப்பை அடுத்து வட, தென் கொரிய அரசுகள் இன்று பேச்சுவார்த்தை

இரு தலைவர்கள் சந்திப்பை அடுத்து வட, தென் கொரிய அரசுகள் இன்று பேச்சுவார்த்தை
கொரியப்போருக்கு பின்னர் பகை நாடுகளாக மாறிய வட கொரியாவும், தென் கொரியாவும் பகைமை மறந்து இப்போது நட்பு பாராட்ட தொடங்கி உள்ளன.

சியோல்,

கடந்த மாதம் 27–ந் தேதி வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் எல்லையில் பன்முன்ஜோம் கிராமத்தில் அமைந்து உள்ள அமைதி இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியதுடன், முடிவில், கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். ‘‘கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக ஆக்குவதற்கு வடகொரியா எடுக்கிற முக்கிய நடவடிக்கைகள் அர்த்தம் உள்ளவை என்று தென், வட கொரியா ஒப்புக்கொண்டு உள்ளன. இதில் இரு தரப்பும் தங்களது பொறுப்புகளை, பங்களிப்புகளை செய்வதற்கு உறுதி எடுத்துக்கொண்டு உள்ளன’’ என்று அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும் கொரிய போரை முறைப்படி முடிவுக்கு கொண்டுவரவும் இரு தலைவர்களும் உடன்பட்டனர்.

இந்த நிலையில், பன்முன்ஜோம் கிராமத்தில் இன்று (புதன்கிழமை) வட, தென்கொரியா அரசுகள் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கொரியப்போரை அதிகாரப்பூர்வமாகவும், முறைப்படியும் முடிவுக்கு கொண்டுவருவது பற்றியும், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது பற்றியும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த தகவல்களை தென்கொரிய ஒருங்கிணைப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை மறித்தது தொடர்பாக போராட்டம் நடத்த முயன்றவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை மறித்தது தொடர்பாக போராட்டம் நடத்த முயன்றவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
2. பாகிஸ்தானுடன் எப்படி பேச்சு நடத்த முடியும்? - ஐ.நா. கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் கேள்வி
கொலையாளிகளை புகழும் பாகிஸ்தானுடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும்? என்று ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் கேள்வி விடுத்தார்.
3. உலகைச்சுற்றி...
பொருளாதார கொள்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பிய கூட்டமைப்பும், சீனாவும் சம்மதித்துள்ளன.
4. இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு இவ்வளவு அவசரம் காட்டியது ஏன்? இம்ரானுக்கு பாக். எதிர்க்கட்சிகள் கண்டனம்
இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு இவ்வளவு அவசரம் காட்டியது ஏன்? என இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
5. இரு கொரியாக்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது
வட கொரியாவின் பியாங்யாங் நகரில் இரு கொரியாக்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது.