ஆப்கானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அட்டூழியம், பள்ளிக்கு தீ வைப்பு, பணியாளர்கள் கொலை


ஆப்கானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அட்டூழியம், பள்ளிக்கு தீ வைப்பு, பணியாளர்கள் கொலை
x
தினத்தந்தி 1 July 2018 9:39 AM GMT (Updated: 1 July 2018 9:39 AM GMT)

ஆப்கானிஸ்தானில் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் மூன்று பேரை தலை துண்டித்து கொலை செய்துள்ளனர்.

காபூல்,

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது. அண்மையில் பயங்கரவாதிகள் மாகாணத்தில் பள்ளிகளை குறிவைத்து தாக்குதலை மேற்கொள்வோம் என மிரட்டல் விடுத்தார்கள். இதனையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி ஒன்றில் பணியாளர்கள் மூவர் தலை துண்டித்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டு உள்ளனர். பயங்கரவாதிகள் பள்ளிக்கு தீ வைத்துள்ளனர், அதில் பள்ளியின் அலுவலகம் மற்றும் நூலகம் எரிந்து சாம்பலானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.

இருப்பினும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டு உள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story