ஆப்கானில் இந்தியர் உள்பட வெளிநாட்டவர்களை கடத்தி பயங்கரவாதிகள் கொலை


ஆப்கானில் இந்தியர் உள்பட வெளிநாட்டவர்களை கடத்தி பயங்கரவாதிகள் கொலை
x
தினத்தந்தி 2 Aug 2018 8:48 AM GMT (Updated: 2 Aug 2018 8:48 AM GMT)

ஆப்கானிஸ்தானில் இந்தியர் உள்பட மூன்று வெளிநாட்டவர்களை கடத்தி பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்.

காபூல்,

காபூல் நகரில் வெளிநாட்டு நிறுவனத்தில் பணியாற்றிய மூவரை பயங்கரவாதிகள் கடத்தி சென்று கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர் என்று அந்நாட்டு போலீஸ் தெரிவித்துள்ளது. மற்றவர்கள் மலேசியா மற்றும் மெக்டோனியாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பாதுகாப்பு படை விசாரித்து வருகிறது. முழு தகவல்கள் வெளியாகவில்லை.

Next Story