உலக செய்திகள்

தென்கொரியாவும், வட கொரியாவும் இணைந்து அமைத்த புதிய அலுவலகம் திறப்பு + "||" + The opening of a new office in South Korea and North Korea

தென்கொரியாவும், வட கொரியாவும் இணைந்து அமைத்த புதிய அலுவலகம் திறப்பு

தென்கொரியாவும், வட கொரியாவும்  இணைந்து அமைத்த புதிய அலுவலகம் திறப்பு
வட கொரியாவில் தென்கொரியாவும், வட கொரியாவும் இணைந்து அமைத்த புதிய அலுவலகம் திறக்கப்பட்டது.
சியோல்,

கொரியப்போரைத் தொடர்ந்து பகைவர்களாக விளங்கி வந்த தென்கொரியாவும், வட கொரியாவும் இப்போது தங்கள் பகைமை மறந்து நல்லுறவை பராமரிக்கத் தொடங்கி உள்ளன. வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்-ம் ஏற்கனவே இரு முறை சந்தித்து பேசி உள்ளனர்.

வரும் செவ்வாய்க்கிழமையன்று தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் 3 நாள் பயணமாக வடகொரியாவுக்கு செல்கிறார். அப்போது அவர் கிம் ஜாங் அன்னுடன் மூன்றாவது சுற்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். இந்த நிலையில், இரு கொரியாக்கள் கூட்டு தொடர்பு அலுவலகம் ஒன்றை வடகொரியாவின் கேசாங் நகரில் நேற்று திறந்தன.

இந்த விழாவில் தென்கொரிய ஒருங்கிணைப்புத்துறை மந்திரி சோ மியோங் கியோன் பேசும்போது, “வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று (நேற்று) தொடங்கி உள்ளது. தென்கொரியாவும், வடகொரியாவும் இணைந்து உருவாக்கி உள்ள புதிய சமாதான சின்னமாக இந்த அலுவலகம் திகழும்” என குறிப்பிட்டார்.தொடர்புடைய செய்திகள்

1. 10 ஆண்டுகளில் முதல்முறையாக வட கொரியாவுக்குள் தென் கொரியா ரெயில் சென்றது
தென் கொரியாவின் ரெயில், கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக வட கொரியாவுக்குள் சென்றது.
2. தென்கொரியாவில் 8 பெண்கள் கற்பழிப்பு - பாதிரியாருக்கு 15 ஆண்டு சிறை
தென்கொரியாவில், 8 பெண்களை கற்பழித்த பாதிரியாருக்கு 15 ஆண்டுகள் சிறைதண்டணை விதிக்கப்பட்டது.
3. தேர்வுக்காக விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தம், தாழ்வாக பறக்கவும் தடை!
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
4. உலகைச் சுற்றி
தென்கொரியாவில் நிதி மந்திரியை அதிரடியாக பதவி நீக்கம் செய்து அதிபர் மூன் ஜே இன் உத்தரவிட்டார்.
5. ஊழல் வழக்கில் தென்கொரிய முன்னாள் அதிபருக்கு 15 ஆண்டு சிறை
தென்கொரியாவில் 2008–ம் ஆண்டு முதல் 2013–ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் லீ மியுங்–பாக் (வயது 76).