உலக செய்திகள்

பாரீஸ்: வீட்டில் சிங்கக்குட்டியை வைத்திருந்தவர் கைது + "||" + Paris: The Man arrested after a LION cub is found

பாரீஸ்: வீட்டில் சிங்கக்குட்டியை வைத்திருந்தவர் கைது

பாரீஸ்: வீட்டில் சிங்கக்குட்டியை வைத்திருந்தவர் கைது
பாரீஸ் நகரில் வீட்டில் சிங்கக்குட்டியை வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் ஒருவர் வீட்டில் சட்ட விரோதமாக சிங்கக்குட்டி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பிறந்து 6 வாரங் களே ஆன அந்த பெண் சிங்கக் குட்டியை அவர் சுமார் 11 ஆயிரம் டாலருக்கு (சுமார் ரூ.8 லட்சத்து 14 ஆயிரம்) விற்க முயற்சிப்பதாகவும் தெரியவந்தது.


உடனடியாக போலீசார் அங்கு சென்றனர். அந்த வீட்டில் அவர்கள் சிங்கக்குட்டி இருப்பதைக் கண்டனர். அந்த சிங்கக்குட்டி நல்ல ஆரோக்கியமாகவும் இருந்ததை பார்த்தனர். இதையடுத்து அந்த சிங்கக்குட்டியை அவர்கள் கைப்பற்றி, வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

சிங்கக்குட்டியை சட்டவிரோதமாக வீட்டில் வைத்திருந்த 30 வயதான ஆண் ஒருவரை அவர்கள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்துகின்றனர். அவர் ஏற்கனவே திருட்டு வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

பாரீஸ் நகரில் சட்ட விரோதமாக வீட்டில் சிங்கக்குட்டியை வைத்திருந்து ஒருவர் பிடிபடுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு அங்கு ஒரு காலி வீட்டில் ஒருவர் சிங்கக்குட்டியுடன் ‘செல்பி’ படம் எடுத்தபோது பிடிபட்டார். அந்த சிங்கக்குட்டி தென் ஆப்பிரிக்க காட்டில் இருந்து வந்தது தெரியவந்து, பின்னர் அங்கு கொண்டு போய் விடப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் 50 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்றவர் கைது 85 நோட்டுகள் பறிமுதல்
திருச்சி காந்திமார்க்கெட் அருகே பெண் வியாபாரியிடம் கள்ளநோட்டை மாற்ற முயன்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 85 நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2. ஐ.பி.எல். சூதாட்டம்; 7 பேர் கைது
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. மணவாளக்குறிச்சி அருகே 2 பஸ்களின் கண்ணாடி உடைப்பு வாலிபர் கைது
மணவாளக்குறிச்சி அருகே 2 பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. பர்கூர் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய வீரப்பன் கூட்டாளி கைது
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதி போதமலையில் பர்கூர் வனச்சரகர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.
5. வலங்கைமான் அருகே பாதை தகராறில் விவசாயி மீது தாக்குதல் 2 பேர் கைது
வலங்கைமான் அருகே வயலுக்கு செல்லும் பாதை தகராறில் விவசாயியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.