உலக செய்திகள்

மெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் விரைவில் அவசர நிலை பிரகடனம் - டிரம்ப் சூசக தகவல் + "||" + Mexico border wall issue: Emergency Declaration in the United States - Trump Success Information

மெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் விரைவில் அவசர நிலை பிரகடனம் - டிரம்ப் சூசக தகவல்

மெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் விரைவில் அவசர நிலை பிரகடனம் - டிரம்ப் சூசக தகவல்
மெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் தொடர்பாக, அமெரிக்காவில் விரைவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் என டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்தில் டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார். அதே போல் இந்த திட்டத்துக்கு உள்நாட்டு நிதியை ஒதுக்க முடியாது என்பதில் ஜனநாயக கட்சியினர் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக சமீபத்தில் ஜனநாயக கட்சி தலைவர்களுடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தபோது, டிரம்ப் வெளி நடப்பு செய்தார்.

இந்த நிலையில் தெற்கு எல்லையையொட்டி உள்ள டெக்சாஸ் மாகாணத்துக்கு டிரம்ப் பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டிரம்ப், “ஆம், அது பற்றி நான் தீவிரமாக ஆலோசித்து வருகிறேன். நாம் அதை விரைவாக செய்ய வேண்டும். ஏனெனில் அது மட்டும்தான் தீர்வு. அதற்கு செலவு கிடையாது. நாம் ஆண்டு தோறும் எல்லை பாதுகாப்புக்கு செலவிடுவதை விட, சுவருக்கு குறைந்த செலவுதான் ஆகும்” என தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. மேகதாது அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு
மேகதாது அணை விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மனுவுக்கு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.
2. எல்லை சுவர் விவகாரம்: ஜனநாயக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இருந்து டிரம்ப் வெளிநடப்பு
மெக்சிகோ எல்லை சுவர் திட்டம் தொடர்பாக ஜனநாயக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இருந்து டிரம்ப் வெளிநடப்பு செய்தார்.
3. சபரிமலை விவகாரம்: கேரளாவில் வன்முறை நீடிப்பு
சபரிமலை விவகாரத்தில் கேரளாவில் வன்முறை சம்பவங்கள் நீடிப்பதால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
4. பெண்கள் தரிசனத்துக்கு எதிர்ப்பு: சபரிமலை பயணத்தை பாதியில் ரத்து செய்த அய்யப்ப பக்தர்கள்
சபரிமலையில் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சபரிமலை பயணத்தை குமரி பக்தர்கள் பாதியில் ரத்து செய்தனர். மேலும் மாலையை கழற்றி விரதம் முடித்தனர்.
5. மேகதாது அணை கட்டும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மனு
மேகதாது அணை கட்டுவதற்கான செயல்திட்ட முன்வரைவு அறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதிக்கு தடை விதிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல் செய்தது.