உலக செய்திகள்

சீனாவில் மருந்து ஆலையில் தீ விபத்து; 10 பேர் பலி + "||" + Fire accident at China pharmaceutical factory; 10 people killed

சீனாவில் மருந்து ஆலையில் தீ விபத்து; 10 பேர் பலி

சீனாவில் மருந்து ஆலையில் தீ விபத்து; 10 பேர் பலி
சீனாவில் மருந்து ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலியாயினர்.
பீஜிங்,

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஷினான்ஜி நகரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து ஆலை இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் மாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. ஆலையின் கீழ் தளத்தில் உள்ள எரிவாயு குழாய்களை சீரமைக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு திடீரென தீப்பிடித்தது.


இதனால் அங்கு கரும் புகை மண்டலம் எழுந்து, ஆலை முழுவதையும் சூழ்ந்தது. தீவிபத்தை தொடர்ந்து, ஆலையில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் அலறி அடித்தபடி வெளியே ஓடினர். எனினும் தீயில் சிக்கியும், புகையால் கடும் மூச்சு திணறல் ஏற்பட்டும் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடந்த மாதம் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 78 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகைச் சுற்றி...
சீனாவில் அடுத்த ஆண்டுக்குள் வறுமையை ஒழிப்பதற்கு அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் சூளுரைத்துள்ளார்.
2. வீட்டு உபயோக பொருட்கள் வைத்திருந்த தனியார் நிறுவன குடோனில் பயங்கர தீ
தேனியில் வீட்டு உபயோக பொருட்கள் வைத்திருந்த தனியார் நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
3. டெல்லி பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பெரிய அளவில் ஏற்பட்ட தீயை அணைக்க 22 தீயணைப்பு வாகனங்கள் சென்றுள்ளன.
4. சீனாவில் பள்ளி உணவில் விஷம் கலந்த ஆசிரியர் கைது
சீனாவில் பள்ளி உணவில் விஷம் கலந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அந்த சம்பவத்தில் 23 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
5. உலகைச்சுற்றி...
சீனாவில் யுனான் மாகாணத்தில் நடந்த சுரங்க வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.