உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 20 April 2019 9:45 PM GMT (Updated: 20 April 2019 7:45 PM GMT)

சீனாவில் அடுத்த ஆண்டுக்குள் வறுமையை ஒழிப்பதற்கு அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் சூளுரைத்துள்ளார்.


* பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ள பழமையான நோட்ரடாம் தேவாலயம், ஐ.நா. சபையின் கலாசார அமைப்பான யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகும். கடந்த 15-ந் தேதி மாலை அந்த தேவாலயத்தில் கோரத்தீ விபத்து ஏற்பட்டு, பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த தேவாலயத்தின் உச்சியில் கூடு கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிற சுமார் 2 லட்சம் தேனீக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை; அவை உயிரோடு இருக்கின்றன என தகவல் வெளியாகி ஆச்சரியப்பட வைத்துள்ளது.

* அமெரிக்காவில் கடந்த ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் தங்களது 13 குழந்தைகளை ஒரு தம்பதியர் அடைத்து வைத்து சித்ரவதை செய்து சட்டத்தின் பிடியில் சிக்கினர். அவர்களுக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர்களது குழந்தைகளில் இருவரான டேவிட், லூயிஸ் ஆகிய 2 பேரும், கோர்ட்டில் ஆஜராகி தங்களுக்கு பெற்றோர் எவ்வளவோ கொடுமைகள் செய்திருந்தாலும் அவர்களை தாங்கள் மன்னிப்பதாக உருக்கமுடன் தெரிவித்தனர்.

* சீனாவில் அடுத்த ஆண்டுக்குள் வறுமையை ஒழிப்பதற்கு அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் சூளுரைத்துள்ளார்.

* 1984-ம் ஆண்டு நடந்த போபால் விஷ வாயு கசிவில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இது, 20-ம் நூற்றாண்டில் தொழிற்சாலை சார்ந்து நடந்த விபத்துகளில் மிகப்பெரியது என ஐ.நா. சபையின் சர்வதேச தொழில் அமைப்பு கூறி உள்ளது.

* ஏமன் நாட்டில் டாய்ஸ் மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அதிகாரி ஒருவர் பலி ஆனார்.

* முதன்முதலாக அமெரிக்காவின் யு.எஸ். ஸ்டார் லைனர் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வரும் நவம்பர் 1-ந் தேதி வீரர்களை ஏற்றிச்செல்லப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* பெரு நாட்டில் ஊழல் வழக்கில் முன்னாள் அதிபர் பெட்ரோ பாப்லோவை 3 ஆண்டுகள் காவலில் வைக்க அந்த நாட்டின் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story