உலக செய்திகள்

வங்காளதேசத்தில் கோர விபத்து: பாலம் உடைந்து கால்வாய்க்குள் விழுந்த ரெயில் - பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு + "||" + Accident in Bangladesh: The train that broke the bridge and fell into the canal - Death toll rises to 7

வங்காளதேசத்தில் கோர விபத்து: பாலம் உடைந்து கால்வாய்க்குள் விழுந்த ரெயில் - பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

வங்காளதேசத்தில் கோர விபத்து: பாலம் உடைந்து கால்வாய்க்குள் விழுந்த ரெயில் - பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
வங்காளதேசத்தில் பாலம் உடைந்து கால்வாய்க்குள் ரெயில் விழுந்ததில் பலி எண்ணிக்கை தற்போது 7 ஆக உயர்ந்துள்ளது.
டாக்கா,

வங்காளதேசத்தின் தலை நகர் டாக்கா மற்றும் வட கிழக்கு மாவட்டமான சில்ஹெட் இடையே உபாபன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை இந்த ரெயில் சில்ஹெட்டில் இருந்து டாக்கா நோக்கி புறப்பட்டு சென்றது.


ரெயிலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனைத்து பெட்டிகளிலும் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏறியதால் மிகுந்த கூட்ட நெரிசலோடு பயணம் செய்யவேண்டிய சூழல் இருந்தது. நடை பாதையிலும், கதவுகளுக்கு அருகிலும் நின்றபடி மக்கள் பயணம் செய்தனர்.

மவுலி பஜார் மாவட்டத்தில் குலாவுரா உபாசிலா என்ற இடத்தில் கால்வாய்க்கு மேல் செல்லும் ரெயில்வே பாலத்தில் உபாபன் எக்ஸ் பிரஸ் ரெயில் மிதவேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் ரெயில்வே பாலம் திடீரென உடைந்தது.

இதனால் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 6 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டன. அவற்றில் 2 பெட்டிகள் கால்வாய்க்குள் விழுந்தன. மற்ற பெட்டிகள் கல்வாயின் கரையோரத்தில் உருண்டு விழுந்தன. அந்த ரெயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் அனைவரும் மரண ஓலமிட்டனர்.

ரெயில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் சுமார் 200 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ஆம்புலன்சுகள் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரெயிலில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்ததால் பாரம் தாங்காமல் ரெயில்வே பாலம் உடைந்து விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் உயிர் தப்பிய பயணி ஒருவர் கூறுகையில், “ரெயில் பெட்டிகளில் நிற்பதற்கு கூட இடம் இல்லை. அனைத்து பெட்டிகளிலுமே கூட்ட நெரிசல் இருந்தது” என்றார்.

ரெயில்வே அதிகாரி ஒருவர் விபத்து குறித்து பேசுகையில், “ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் மிகவும் பழமையானவை. அதன் காரணமான விபத்து நேரிட்டு இருக்கலாம் என தோன்றுகிறது. அதே சமயம் ரெயிலின் வேகத்தால் விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது” என கூறினார்.

பிரம்மன்பாரியா என்ற மாவட்டத்தில் உள்ள மேம்பாலம் உடைந்ததன் காரணமாக டாக்கா-சில்ஹெட் இடையேயான பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருப்பதால் கடந்த சில நாட்களாக உபாபன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கலெக்டர் உத்தரவிட்டும் ரெயில் நிலையத்திற்கு இயக்கப்படாத அரசு பஸ்கள்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
விருதுநகர் ரெயில் நிலையத்திற்கு அரசு பஸ்கள் இயக்க கலெக்டர் உத்தரவிட்ட பின்னரும் நடவடிக்கை எடுக்காத நிலை உள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
2. தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: பலியான 2 வாலிபர்கள் பற்றி உருக்கமான தகவல்கள்
தோவாளை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி பலியான 2 வாலிபர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
3. கேமரூன் நாட்டில் இருந்து மெக்சிகோவுக்கு சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி
கேமரூன் நாட்டில் இருந்து மெக்சிகோவுக்கு சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 2 பேர் பலியாயினர்.
4. பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து: கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட 33 பேர் காயம்
அயோத்தியாப்பட்டணம் அருகே பஸ்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட 33 பேர் காயம் அடைந்தனர்.
5. செஞ்சி அருகே விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை, மகன் பலி
செஞ்சி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை, மகன் உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.