இளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது சிறுவன்


இளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது சிறுவன்
x
தினத்தந்தி 18 July 2019 11:35 AM GMT (Updated: 18 July 2019 11:35 AM GMT)

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 4 வயது சிறுவன் பிரிட்டனின் இளவரசி டயானாவின் மறுபிறவி என்று வினோதமாகக் கூறி வருகிறான்.

 சிட்னி

ஆஸ்திரேலிய தொலைக்காட்சி  தொகுப்பாளரான டேவிட் காம்ப்பெல்லின் மகனான பில்லி காம்ப்பெல் 1997 இல் கார் விபத்தில் இங்கிலாந்து இளவரசி இறந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தார்.

“பில்லி இரண்டு வயதாக  இருக்கும் போது டயானாவின் அட்டைப் படத்தை சுட்டிக்காட்டி, ‘இது  நான் ஒரு இளவரசியாக இருந்தபோது அது நான்தான் என கூறி உள்ளான். குழந்தைக்கு டயானாவுடனான ஆவேசம் குறையவே இல்லை.

சிறுவன் பில்லி  டயானாவின் வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை விவரிக்க தொடங்கினான். அவர் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோரை தனது “மகன்கள்” என்று குறிப்பிட்டான் என அபில்லியின் தந்தை டேவிட் கூறி உள்ளார்.

Next Story