உலக செய்திகள்

‘இந்தியாவும், சீனாவும் இனி வளரும் நாடுகள் அல்ல’ டிரம்ப் கூறுகிறார் + "||" + India and China are no longer developing countries, says Trump

‘இந்தியாவும், சீனாவும் இனி வளரும் நாடுகள் அல்ல’ டிரம்ப் கூறுகிறார்

‘இந்தியாவும், சீனாவும் இனி வளரும் நாடுகள் அல்ல’ டிரம்ப் கூறுகிறார்
அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கானது என்ற கொள்கையில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் உறுதியாக உள்ளார்.
வாஷிங்டன், 

அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா கடும் வரி விதித்து, வரிவிதிப்பு மன்னனாக திகழ்வதாக அவர் குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த நிலையில் அங்கு பென்சில்வேனியாவில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “இந்தியாவும், சீனாவும் ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக திகழ்கின்றன. அவர்களை இனி வளரும் நாடுகள் என கூற முடியாது. எனவே அவர்கள் உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து நன்மைகளை பெற முடியாது” என கூறினார்.

மேலும், “அவர்கள் வளர்ந்து வரும் நாடுகள் என்ற வகையில் உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து நன்மைகளை பெறுகின்றனர். இது அமெரிக்காவுக்கு பாதகமாக அமைகிறது. அவர்கள் ஆண்டாண்டு காலமாக நம்மிடம் இருந்து நன்மைகளை அனுபவித்து வருகின்றனர்” எனவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. டிரம்ப், ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணம்: தலீபான்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், திடீர் பயணமாக ஆப்கானிஸ்தானுக்கு சென்றார். அங்கு அவர் தலீபான்களுடன் அமெரிக்கா மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக கூறினார்.
2. தலீபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது :அமெரிக்க அதிபர் டிரம்ப்
டொனால்டு டிரம்ப் திடீர் பயணமாக ஆப்கானிஸ்தான் சென்றார். இந்த பயணத்தின் போது, தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியதாக தெரிவித்தார்.
3. என்னை பதவியை விட்டு நீக்க அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை நடத்துவது வேடிக்கையானது - டிரம்ப் கருத்து
என்னை பதவியை விட்டு நீக்க அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை நடத்துவது வேடிக்கையானது என அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்து உள்ளார்.
4. காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தராக செயல்பட தயார் - டிரம்ப் மீண்டும் அறிவிப்பு
காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடுவராகவோ, மத்தியஸ்தராகவோ செயல்பட தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.
5. ஐ.நா.வில் பேசிய மாணவி குறித்த டிரம்ப் விமர்சனத்துக்கு எதிர்ப்பு
பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா. மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சுவீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், பள்ளி மாணவியுமான கிரேட்டா தன்பெர்க் உலக தலைவர்களை கடுமையாக சாடினார்.