பிலிப்பைன்ஸ் நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 807 பேர் பலி?


பிலிப்பைன்ஸ் நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 807 பேர் பலி?
x
தினத்தந்தி 20 Aug 2019 10:15 PM GMT (Updated: 20 Aug 2019 8:02 PM GMT)

பிலிப்பைன்ஸ் நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 807 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளன.


* பிலிப்பைன்ஸ் நாட்டில் டெங்கு காய்ச்சல் நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 1 லட்சத்து 88 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 807 பேர் பலியாகிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* ‘பிரெக்ஸிட்’ தொடர்பான மறுபேச்சுவார்த்தையை தொடங்குவது குறித்து பரிசீலிக்க வலியுறுத்தி ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடிதம் எழுதி உள்ளார்.

* ஸ்பெயின் நாட்டின் ஹாலிடே தீவுப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் அங்கு உள்ள கிராமப்புறங்களில் வசித்து வந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். நெருப்பை அணைக்கும் பணியில் 700-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

* ஈராக்கின் ஹீத் நகரில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான அபு பக்கர் அல் பக்தாதிக்கு நெருக்கமான பயங்கரவாத தளபதி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Next Story