உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்பப்பெறப்படுமா? - டிரம்ப் பதில் + "||" + No complete withdrawal from Afghanistan: Donald Trump

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்பப்பெறப்படுமா? - டிரம்ப் பதில்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்பப்பெறப்படுமா? - டிரம்ப் பதில்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்பப்பெறப்படுமா என்பது குறித்து டிரம்ப் பதில் அளித்துள்ளார்.
காபூல்,

ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுக்கு எதிராக தலீபான் பயங்கரவாதிகள் சண்டையிட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதற்காக அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டு உள்ளன. எனினும் தலீபான்களை முழுமையாக வீழ்த்த முடியாமல் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க படைகள் திணறி வருகின்றன. அதே சமயம் இந்த உள்நாட்டு போரில் அப்பாவி மக்கள் அதிகமாக கொல்லப்படுகிறார்கள்.


எனவே உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு தலீபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக தலீபான் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இடையே இதுவரை 8 கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பிலும் ஒருமித்த கருத்து ஏற்பட்டு இருப்பதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பின் தலைமை முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்பப்பெறப்படாது என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “தலீபான் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதன் மூலம் என்ன நடக்கிறது, என்ன பலன் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எனினும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வீரர்கள் அனைவரும் திரும்பிவிடமாட்டார்கள். பிராந்திய ஸ்திரதன்மையை உறுதி செய்ய சில வீரர்கள் அங்கு தொடர்ந்து இருப்பார்கள்” என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் இளம் ‘ராப்’ பாடகர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் இளம் ‘ராப்’ பாடகர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2. அமெரிக்காவில் தீயில் இருந்து குடும்பத்தினர் 7 பேரை காப்பாற்றிய சிறுவன்
அமெரிக்காவில் 5 வயது சிறுவன் தனது குடும்ப உறுப்பினர்களை தீவிபத்தில் இருந்து காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
3. டிரம்ப்பின் 3 மணி நேர குஜராத் பயணத்திற்கு ரூ.100 கோடி செலவு
டிரம்ப் வருகையையொட்டி 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து அகமதபாத் நகரை அழகுப்படுத்தியும், சாலைகள் சீரமைக்கப்பட்டும் வருகின்றன.
4. அமெரிக்க ஜனாதிபதி வருகை: டிரம்ப் அனுப்பிய பாகற்காயை மோடி ஒரு இனிப்பாக மாற்றுவார் - சிவ சேனா
அமெரிக்க ஜனாதிபதி வருகையின் போது டிரம்ப் அனுப்பிய பாகற்காயை மோடி ஒரு இனிப்பாக மாற்றுவார் என முன்னாள் கூட்டாளி சிவ சேனா கூறி உள்ளது.
5. அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல் - ‘சிறிய தவறு செய்தாலும் தாக்குதல் நடத்துவோம்’
சிறிய தவறு செய்தாலும் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.