இஸ்லாமாபாத், கராச்சி விமான நிலையங்களை ராணுவத்திற்காக பயன்படுத்துகிறது பாகிஸ்தான்


இஸ்லாமாபாத், கராச்சி விமான நிலையங்களை ராணுவத்திற்காக பயன்படுத்துகிறது பாகிஸ்தான்
x
தினத்தந்தி 22 Aug 2019 1:04 PM GMT (Updated: 22 Aug 2019 1:04 PM GMT)

சீனாவைப் போன்று பாகிஸ்தானும் இஸ்லாமாபாத், கராச்சி விமான நிலையங்களை ராணுவத்திற்காக பயன்படுத்துகிறது என்பது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பழைய மற்றும் புதிய விமான நிலையங்கள் மற்றும் கராச்சி விமான நிலையத்தை விமானப்படை பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. சீனாவின் வழியில் பாகிஸ்தானும் தனது சிவில் விமான நிலையங்களை இராணுவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தி கொண்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாத முகாம்களை அழித்த பின்னர் கராச்சி விமான நிலையத்தில் ராணுவ விமானங்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.Next Story