‘ரோபோ’வுடன் சென்ற சோயூஸ் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தரை இறங்குவதில் சிக்கல்


‘ரோபோ’வுடன் சென்ற சோயூஸ் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தரை இறங்குவதில் சிக்கல்
x
தினத்தந்தி 24 Aug 2019 10:30 PM GMT (Updated: 24 Aug 2019 8:44 PM GMT)

‘ரோபோ’வுடன் சென்ற சோயூஸ் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோலியோவ்,

புகழ்பெற்ற ரஷிய விண்வெளி நிறுவனமான ரோஸ் காஸ்மாஸ், விண்வெளி ஆராய்ச்சிக்காக மனித வடிவிலான ‘ரோபோ’ ஒன்றை தயாரித்து, பெடோர் என்று பெயரிட்டது.

இந்த பெடோர் ரோபோவை, சோயூஸ் எம்எஸ்-14 விண்கலம் மூலம் கஜகஸ்தானில் உள்ள பைக்கனூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து 22-ந்தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பினர்.

இந்த சோயூஸ் எம்எஸ்-14 விண்கலம் நேற்று சர்வதேச விண்வெணி நிலையத்துக்கு போய்ச்சேரும் என தகவல்கள் வெளியாகின.

ஆனால், திட்டமிட்டபடி அந்த விண்கலம் நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் தரை இறங்க முடியவில்லை. அதில் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தின் தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து, அந்த விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பாதுகாப்பான தொலைவில் விஞ்ஞானிகள் நிலைநிறுத்தினர்.

நாளை (திங்கட்கிழமை) காலை, சோயூஸ் எம்எஸ்-14 விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்தில் தரை இறக்குவதற்கான பணி மேற்கொள்ளப்படும் என சர்வதேச விண்வெளி நிலையத்தின் தரை கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் விளாடிமிர் சோலோவ்யோவ் தெரிவித்தார்.

என்ன காரணத்தினால் திட்டமிட்டபடி சோயூஸ் எம்எஸ்-14 விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தரை இறங்க முடியவில்லை என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.


Next Story