உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘ரூபே’ கார்டு திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் + "||" + Rupay Card Scheme in UAE: Prime Minister Modi started

ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘ரூபே’ கார்டு திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘ரூபே’ கார்டு திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘ரூபே’ கார்டு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அபுதாபி,

2 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடி, இந்தியாவின் ‘ரூபே’ கார்டு திட்டத்தை அங்கு நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு இந்திய நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த இனிப்புக்கடையில் லட்டுகளை வாங்கிவிட்டு ‘ரூபே’ கார்டு மூலம் பணம் செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் நவ்தீப்சிங் சூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இந்த கார்டு ஏற்கனவே சிங்கப்பூர் மற்றும் பூடானில் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் முதலாவதாக அமீரகத்தில் தான் தற்போது ‘ரூபே’ கார்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அபுதாபி, துபாய் உள்பட அமீரகம் முழுவதிலும் உள்ள 5 ஆயிரம் ஏ.டி.எம். எந்திரங்களில் இந்த கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துக் கொள்ள முடியும்.

இதற்கிடையே வெளிநாடுவாழ் தொழிலதிபர்கள் கூட்டம் ஒன்றிலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய பெண்ணுக்கு நேர்ந்த சோகம் - சிறுவன் ஓட்டிய கார் தாயின் உயிரை பறித்தது
ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறுவன் ஒருவன் ஓட்டிய கார் அவனது தாயின் உயிரை பறித்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.